துணைவேந்தர் நியமனம் - யு.ஜி.சியின் புதிய முறையை திரும்ப பெற ஸ்டாலின் கடிதம்.!
cm mk stalin letter write ugc returned new rules appointed university chancellors
யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெற தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 9ம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மான நகலையும் இணைத்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:- "பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், கற்றல் முறை தொடர்பான எஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்.
வரைவு நெறிமுறைகளில் உள்ள பல விதிகள் மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், வரைவு யுஜிசி – நெறிமுறைகள் 2024 தொடர்பான கவலைக்குரிய சில முக்கிய விதிகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.
English Summary
cm mk stalin letter write ugc returned new rules appointed university chancellors