நீட் தேர்வு எழுதாமல் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்க வேண்டுமா.? இதோ சில டிப்ஸ்.!
Here are some tips for you if you want to study medical courses without NEET exam
மருத்துவ படிப்பு என்பது அனைவருக்கும் கனவாக இருக்கக் கூடிய ஒரு படிப்பாகும். குடும்பத்தில் ஒருவராவது டாக்டர் படிக்க வேண்டும் என்பது அனேக மக்களின் கனவாக இருக்கும். தற்போது இருக்கக்கூடிய சூழலில் டாக்டர் படிக்க வேண்டும் என்றால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கான பொருளாதார தேவைகளும் அதிகமாக இருக்கிறது. அடுத்த வாரம் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் நீட் தேர்வு இல்லாமல் மருத்துவத்துறை சார்ந்த படிப்புகளில் என்ன படிக்கலாம் என்று பார்ப்போம்.
பிஎஸ்சி நர்சிங் :
இந்தப் படிப்பு செவிலியர்களுக்கான நான்கு வருட பட்ட படிப்பாகும். மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மற்றும் நோயாளிகளை பராமரிப்பதற்கு உரிய இளங்கலை பட்டப்படிப்பாகும். பிளஸ் 2வில் அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்தப் படிப்பில் சேரலாம்.
பிசியோதெரபி:
4 1/2 வருடங்களைக் கொண்ட இளங்கலை பட்டப்படிப்பு இது. உடலியக்கம் சார்ந்த நோய்களுக்கு உடற்பயிற்சியின் மூலம் தீர்வு காணும் ஒரு பட்டப் படிப்பு இதுவாகும். இந்தப் படிப்பிற்கு மருத்துவமனைகளிலும் சுயமாகவும் நல்ல வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தப் படிப்பில் சேர்வதற்கு பிளஸ் 2வில் தேர்ச்சி போதுமானது. அறிவியல் பிரிவு மற்றும் கணித அறிவியல் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். இந்தப் படைப்பிற்கு விண்ணப்பிக்க இயலும். இந்தப் படிப்பில் ஆறு மாத மருத்துவ பயிற்சியும் வழங்கப்படுகிறது என்பது முக்கியமானது.
பி எஸ் சி சைக்காலஜி:
மூன்று வருட இளங்கலை பட்டப்படிப்பு ஆன இது ஒருவரின் உளவியல் தன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் கல்வியை கற்றுத் தருகிறது. உடல் சார்ந்த பாதிப்புகளை போலவே பணம் சார்ந்த பாதிப்புகளில் இருக்கும் ஒருவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் அவருக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கும் இந்த படிப்பு உதவுகிறது. தற்போது மருத்துவமனைகளிலும் தனியார் மறுவாழ்வு இல்லங்களிலும் இந்த படிப்பிற்கு நல்ல மதிப்பு இருக்கிறது.
கால்நடை மருத்துவம்:
மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் ஏற்படும் நோய்களை கண்டறிந்து அவற்றை குணப்படுத்துவதற்கு உதவும் கல்வியை இது கற்றுத் தருகிறது. இந்தப் படிப்பு 5 ஆண்டு கால படிப்பாகும் . இவற்றில் சேர பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
பி பார்ம்:
மருத்துவமனைகளிலும் மெடிக்கல்களிலும் மருந்துகளை கையாளுவதற்கான பயிற்சி வழங்கும் படிப்பு இதுவாகும். இந்தப் படிப்பு நான்கு வருட காலம் போயிட்டு வைக்கப்படுகிறது. இந்தப் படிப்பில் தேர்ச்சி பெறுவதன் மூலம் மருத்துவமனைகளில் இருக்கும் மருந்தகங்களிலும் தனியார் மருந்தகங்களிலும் பணிகளை பெறலாம்.
English Summary
Here are some tips for you if you want to study medical courses without NEET exam