மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5% இட ஒதுக்கீடு செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், இந்த சட்டத்தின் மூலம் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இந்த மனு மீது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க கொண்டு வரப்பட்ட சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்த சட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

High court order for reservation in Medical seats for govt students


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->