மிதாலி ராஜ் ஓய்வு.. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் நியமனம்.! - Seithipunal
Seithipunal


இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மிதாலி ராஜ் ஓய்வு பெற்றதை அடுத்து, இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதை எடுத்து ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர் ஜூன் 23ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது .அதில் ஹர்மன்பிரீத் கவுர்  கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொடருக்கான இந்திய வீராங்கனைகள் :

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன் ), ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, எஸ் மேக்னா, தீப்தி ஷர்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட், சிம்ரன் பகதூர், ரிச்சா கோஷ் , பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங் , ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team new captain harmanpreet kaur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->