69 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
job vacancy in central government job
மத்தியத் தொழில்துறை பாதுகாப்புப் படையில் காலியாகவுள்ள கான்ஸ்டபிள் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி:- விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 23 வயது உடையவராக இருக்க வேண்டும். மேலும், விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
சம்பள விபரம்: மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் உடல் பரிசோதனை, எழுத்துத் தேர்வு, வர்த்தகச் சோதனை, ஆவண சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : ஏப்ரல் 3.
English Summary
job vacancy in central government job