புதிய வினாத்தாளைக் கொண்டு நாளை தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


புதிய வினாத்தாளைக் கொண்டு நாளை கணித பாட தேர்வு நடத்தப்படும் என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். 

இரண்டாம் திருப்புதல் தேர்வில், நாளை நடைபெறவிருந்த பன்னிரண்டாம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் கசிந்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிவுக்கு இடமில்லை என்று ஏற்கனவே, தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில், தற்போது 12ஆம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் கசிந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே முதல்கட்ட திருப்புதல் தேர்வில் அனைத்து படங்களின் வினாத்தாள்களும் முன்கூட்டியே கசிந்த நிலையில், தற்போது மீண்டும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள்களும் கசிந்துள்ளது. 

இந்நிலையில், 12ம் வகுப்பு 2ம் திருப்புதல் தேர்வுக்கான கணித பாட வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், புதிய வினாத்தாளைக் கொண்டு நாளை கணித பாட தேர்வு நடத்தப்படும் என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister mahesh say about Revision Exam Question leek issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->