நீட் தேர்வு முறைகேடு - பீகார் மாணவர் பரபரப்பு வாக்குமூலம்..!! - Seithipunal
Seithipunal



நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக நாடு முழுவதும் மாணவர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் உச்ச நீதி மன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கும் நடந்து வருகிறது.

இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது உண்மை தான் என்று வாக்கு மூலம் கொடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் உறவினர் பொறியாளராக  உள்ளதாகவும், அவரின் மூலம் தான் நீட் தேர்வுக்கு முன்பே விடைகளுடன் கூடிய வினாத்தாள்கள் தான் உள்ளிட்ட பல மாணவர்களுக்கு கிடைத்தது என்றும் அந்த மாணவர் கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பீகார் மாநிலத்தின் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் குறிப்பிட்ட சில மாணவர்கள் மற்றும்  சில மாணவர்களின் பெற்றோர்களையும் கைது செய்து, அவர்கள் அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஒரு மாணவரே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே தாமாக முன் வந்து நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளது  நீட் தேர்வின் நம்பகத் தன்மையை குறித்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தி உள்ளது. மேலும் மாணவரின் இந்த வாக்குமூலம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEET Exams Malpractice Bihari Student Gives Sensational Statement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->