இனி திருவள்ளுவர் படத்தை காவி நிறத்தில் வரைய தடை..மாணவர்களுக்கு பறந்த உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் இனி திருவள்ளுவர் படத்தை காவி நிறத்தில் வரைய கூடாது என்றும் இதற்க்கு அரசு தடைவிதித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கூறியுள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி நிருபர்களிடம்கூறியதாவது:கன்னியாகுமரியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர்  கருணாநிதியால் 25 ஆண்டுகளுக்கு முன் 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி ஐயன் திருவள்ளுவர் சிலை கடலில் உள்ள பாறையில் வைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஐயன் திருவள்ளுவர் சிலை கடலில் வைக்கப்பட்ட 25 ஆண்டுகள் நிறைவடைந்து வெள்ளி விழா காண உள்ளது. இதனை முன்னாள் முதலமைச்சர் கலைஞர்  கருணாநிதி கொண்டாட்டமாக மட்டுமின்றி நம் பள்ளி பிள்ளைகளுக்கு ஓவியப் போட்டியாக இருந்தாலும் சரி, அதை சார்ந்துள்ள பல்வேறு ஒப்புவிப்பு போட்டியாக இருந்தாலும் இதுபோன்ற போட்டிகளை நடத்தி, பரிசுகள் வழங்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்.

அது மட்டுமின்றி ஒவ்வொரு மாவட்ட நூல கங்களிலும் இது போன்று வள்ளுவர் புத்தக கண்காட்சி ஓவிய கண்காட்சியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு நூலகத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலமாக வள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டு மாலை மரியாதை செலுத்தும் நிகழ்வும் நடைபெறுகிறது.

திருவள்ளுவருக்கு மரியாதை என்று சொல்கிற போது அனைவருக்கும் பொதுமறையான ஒன்று என்றும் . அந்த விதத்தில் பெருமை கொள்கின்ற ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது எனவும் .மாணவ-மாணவிகள் ஒவ்வொருவரையும் தனித் திறமையை வளர்த்தெடுக்கும் விதமாக தேர்ந்தெடுத்து பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறோம் என பேசியஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  இதில் தேர்வு செய்யப்படு கிற மாணவ செல்வங் களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதை ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறோம்என்று கூறினார்.

மேலும் நிதி பற்றி பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிதி பற்றி பேச ஒன்றிய அரசுதான் மறுக்கிறார்கள். சம்பளத்துக்கும் இண்டர்நெட்டுக்கும் சம்பந்தம் இல்லைஎன்றும் . ஆனால் இண்டர்நெட்டுக்கு பாக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லைஎன்றும் . எங்களுக்கும் அவர்களுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது என. ஒரு அரசாங்கம் நிலுவை வைக்குமா? என கேள்வியெழுப்பினார். 

மேலும் மும்மொழி கல்விக் கொள்கையை பற்றி பேசிய அமைச்சர் இதுபற்றி மத்திய மந்திரி கூறும்போது அது மாதிரிதான் சொல்கிறார். அதனால்தான் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறோம்.ஓவியம் வரைந்த அந்த பிள்ளையிடம் சொல்லி விட்டோம். இம்மாதிரி வரையக் கூடாது என்று சொல்லி உள்ளோம்.இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Painting of Thiruvalluvar in saffron colour is no longer allowed Flight order for students


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->