சிபிஐ விசாரணையின் நம்பகத்தன்மை குறைந்து விட்டது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி!
CHENNAI hc MADURAI CBI
திருநெல்வேலியில் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் போலி நபர்களுக்கு கடன் வழங்கி ரூ.2 கோடியை இழக்க செய்ததாக 13 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில், வங்கி மேலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 8 பேருக்கு 2019ம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் தண்டனை விதித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன், “சிபிஐ மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்று சீரழிந்து வருகிறது. சில வழக்குகளில் முக்கிய குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு, சாதாரண நபர்களிடம் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், நிதி மோசடியில் தாமதமாக பணம் திருப்பித் தொலைத்ததற்காக சிலரை சாட்சிகளாக மாற்றும் நடைமுறையையும் சிபிஐ மேற்கொள்கிறது எனவும் குறிப்பிடப்பட்டது.
இது போன்ற நிலைமைகளை தடுக்கும் வகையில், சிபிஐ இயக்குநர் நேரடி கண்காணிப்பு அவசியம் என்றும், அதிகாரிகள் தொழில்நுட்ப அறிவு மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
இவ்வழக்கில் சிபிஐ சரிவர விசாரிக்கவில்லை என்பதால், 8 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.