10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்: மாணவர்கள் சாதிக்க வேண்டும் - அன்புமணி இராமதாஸ் வாழ்த்து!
PMK Anbumani Ramadoss wish 10th students
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்து செய்தி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தின்படியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்குகின்றன.
இரு மாநிலங்களிலும் 4,113 மையங்களில் 9 லட்சத்து 13,036 மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தான் மாணவ, மாணவியர் சந்திக்கும் முதல் பொதுத்தேர்வு ஆகும். எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு அடித்தளம் அமைப்பது பத்தாம் வகுப்புப் பொதுதேர்வுகள் தான்.
எனவே, மாணவர்கள் நன்கு படித்து, வினாக்களை புரிந்து கொண்டு பதட்டமின்றி விடைகளை எழுத வேண்டும்; பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் சாதிக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.
English Summary
PMK Anbumani Ramadoss wish 10th students