அஞ்சல் துறையில் வேலை பார்க்கணுமா? இன்னும் நான்கு நாட்கள் தான்.!
post office vacancies apply for only four days
அஞ்சல் துறையில் வேலை பார்க்கணுமா? இன்னும் நான்கு நாட்கள் தான்.!
அஞ்சல் துறையில் காலி பணியிடங்களான 30,041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும்.
அதாவது, indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கடந்த மூன்றாம் தேதி முதல் இந்த மாதம் 23 ம் தேதி வரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் அளிப்பதற்கான கடைசி தேதி 23.08.2023 ஆகும். இந்த பதவிக்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதுமானது. வயது வரம்பு 18 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த வேளையில், 12 ஆயிரத்திலிருந்து 29,380 ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும். இந்த நிலையில், அஞ்சல் துறை பதவிக்கான விண்ணப்ப தேதி முடிவடைவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
English Summary
post office vacancies apply for only four days