2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்.. 6 லட்சம் புதிய வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியீடு.!!
presentation of the budget 2022
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால், இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. முதல்கட்ட கூட்டத்தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்த கட்ட கூட்டத்தொடர் மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாள் பாராளுமன்ற இரு சபைகளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
இந்நிலையில், இன்று 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். 2வது முறையாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
டிஜிட்டல் பொருளாதாரத்தை வளப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாம் கொரோனா காலக்கட்டத்தில் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறோம். தொலைநோக்கு திட்டங்களுடன் நாம் பயணித்து வருகிறோம். 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு. மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளது.
ஏழைகள் நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. வெளிப்படைத் தன்மையுடன் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
English Summary
presentation of the budget 2022