BE படித்தவர்களுக்கு தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை ரெடி! வாய்ப்பை தவற விடாதீங்க!
RAILWAY Job BE Student
இந்தியாவின் அதிவேக ரயில் திட்டத்தை உருவாக்கும் நோக்கில் செயல்படும் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் (NHSRCL) நிறுவனத்தில் புதிய பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் அனுபவமும் உள்ள பொறியியலாளர்கள் மற்றும் கலைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் மற்றும் தகுதிகள்:
Junior Technical Manager (SNT) – 3 இடங்கள்
தகுதி: BE/B.Tech – Electrical/ Electronics/ Communication, 2 ஆண்டு அனுபவம்
Junior Technical Manager (Electrical) – 17 இடங்கள்
தகுதி: BE/B.Tech – Electrical, அனுபவம் அவசியம்
Junior Technical Manager (Civil) – 35 இடங்கள்
தகுதி: BE/B.Tech – Civil, 2 ஆண்டு அனுபவம்
Junior Technical Manager (RS) – 4 இடங்கள்
தகுதி: BE/B.Tech – Electrical/ Electronics/ Mech/ Mechatronics/ Communication, 2 ஆண்டு அனுபவம்
Assistant Technical Manager (Architecture) – 8 இடங்கள்
தகுதி: B.Arch, 2 ஆண்டு அனுபவம்
Assistant Technical Manager (DB Admin) – 1 இடம்
தகுதி: BE/B.Tech அல்லது MCA, Oracle சான்றிதழுடன் அனுபவம்
Assistant Manager (Procurement) – 1 இடம்
தகுதி: BE/B.Tech – ஏதேனும் துறை
Assistant Manager (General) – 2 இடங்கள்
தகுதி: ஏதேனும் இளங்கலைப் பட்டம்
சம்பளம்: ரூ.40,000 – 1,60,000 வரை
வயது வரம்பு: 31.3.2025 தேதியின்படி 35 வயதுக்குள். உபரிவாக இடஒதுக்கீடு பிரிவினருக்கு சலுகை உண்டு.
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400 (SC/ST/பெண்களுக்கு கட்டண விலக்கு)
விண்ணப்ப முறை: www.nhsrcl.in இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
கடைசி நாள்: 24.4.2025