அரசியலில் தான் ஓய்வு, ஆனால் மக்கள் சேவை செய்ய ஆயிரம் வழி உள்ளது - களமிறங்கிய நடிகர் ரஜினிகாந்த்.!
Rajinikanth Foundation TNPSC
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து ஒதுங்கியபோதும், மக்கள் சேவை செய்ய அறக்கட்டளை மூலம் இணையதளம் ஒன்றை தொடங்க ஆசி வழங்கியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக, நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் rajinikanthfoundation.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "ரஜினிகாந்த் அறக்கட்டளை இணையதளம், 26 டிசம்பர் 2021 அன்று மதியம் 3 மணிக்கு தொடங்கப்பட்டது. இந்திய திரைத்துறையின் சூப்பர் ஸ்டார், பத்ம விபூஷன் ரஜினிகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி, அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமயமாக்கப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றைக் கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டது.
எங்களுக்கு உலகளாவிய பார்வை இருந்தாலும், எங்களது ஆரம்ப முயற்சிகளைத் தமிழ்நாட்டில் மட்டுமே எடுக்க விரும்புகிறோம். தமிழ்நாட்டு மக்களின் கருணையும் அன்பும் தான் தனக்கு இவ்வளவு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது என்று சூப்பர் ஸ்டார் எப்போதும் கூறுவார்.
எனவே, இந்த அறக்கட்டளை தமிழகத்திலிருந்து தொடங்கப்படும். நம் அறக்கட்டளை சிறிய ஆரம்பம் , நிலையான முயற்சி, சுயத் திருத்தம், பிறகு இதுவே இறுதியில் மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்தை நம்புகிறது. தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆசியுடன், இலவச TNPSC குரூப் தேர்வுப் பயிற்சிக்கான "சூப்பர் 100 பிரிவு" பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rajinikanth Foundation TNPSC