TNPSC குரூப்-4 கூடுதல் காலி பணியிடங்கள்? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!
Tamil Nadu Public Service Commission Group 4
குரூப்-4 2024 ஆம் ஆண்டு போதுமான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தேர்வர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், "ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி IV, 2024 இல் போதுமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா?
2022 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022- 23 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது சராசரியாக, ஒரு நிதியாண்டிற்கு 3380 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
2024 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு நிதியாண்டிற்கு 4466 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
எனவே 2024 ம் ஆண்டு தொகுதி IV தேர்வின் மூலம் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1086 (4466-3380) காலிப்பணியிடங்கள், ஆக மொத்தம் 2172 (1086×2) காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படவுள்ளன.
எனவே சமூக வலைதளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை கொள்ளப்படுகிறது.
English Summary
Tamil Nadu Public Service Commission Group 4