திரைப்படத்துறைக்கு ரூ.650 கோடி நஷ்டம்; ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்கிறார் ராகேஷ்..! - Seithipunal
Seithipunal


 2024 ஆம் ஆண்டில் மலையாள திரைப்படத்துறைக்கு ரூ.650 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் இது குறித்து கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராகேஷ்;  நடப்பு 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 204 திரைப்படங்கள் வெளிவந்தன. இதில் 26 படங்கள் மட்டுமே ரூ.300 கோடியிலிருந்து 350 கோடி வரை தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்தன என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மற்ற படங்களால் கேரள திரைப்படத்துறைக்கு ரூ.650 கோடி முதல் ரூ.700 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதனால், மலையாள திரையுலகில் நடிகர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களும் சினிமா துறையை நிலை நிறுத்த கடுமையான பணம் தொடர்பான ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

நடிகர்களின் சம்பளம் அதிகரித்து வருவதால், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாத பிரச்சனை தயாரிப்பாளர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தொழில்துறையை சிறப்பாக நடத்துவதற்கு தயாரிப்பாளர்களுடன் ஒத்துழைக்க நடிகர்கள் முன்வர வேண்டும் எனவும் கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Film Producers Council Secretary


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->