டெஸ்ட் போட்டியில் சேவாக்கின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்..!
Jaiswal breaks Sehwags lifetime record in Test matches
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின்0 4-வது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது.
இதில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 140 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா 369 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 115 ரன்களும், ஜெய்ஸ்வால் 82 ரன்களும் குவித்தனர்.
பின்னர் 105 ரன்கள் முன்னிலையுடன் 02-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 234 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக லபுஸ்சேன் 70 ரன்கள் அடித்தார்.
இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் இந்த வருடம் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1478 ரன்கள் அடித்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் அடித்த 03-வது இந்திய வீரர் என்ற சேவாக்கின் (1462 ரன்கள்) வாழ்நாள் சாதனையை முறியடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் அதிக ரன்கள் பட்டியலில்;
01. சச்சின் - 1562 ரன்கள்
02. சுனில் கவாஸ்கர் 1555 ரன்கள்
03. ஜெய்ஸ்வால் - 1478 ரன்கள்
04. சேவாக் - 1462 ரன்கள்
English Summary
Jaiswal breaks Sehwags lifetime record in Test matches