வெளி நாடு, வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் மொழி கற்க தனி பரப்புரை கழகம் - தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் இணையக் கல்விக் கழகம் வாயிலாக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க, பரப்புரைக் கழகம் உருவாக்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், வெளிநாடுகால் மற்றும் வெளிமாநிலங்களில் வாழ்ந்து வரும் தமிழர்கள் தமிழ் மொழி பயில ஏற்பாடு செய்யப்படும் எனவும், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் அமைப்புகளு நிதியுதவி வழங்கப்படும் எனவும், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

இதற்காக தமிழ் இணையக் கல்வி கழகம் வாயிலாக தமிழ் பரப்புரை கழகம் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ் மொழியின் பண்பாடு கலாச்சார பரப்புரை, ஒலி-ஒளி உச்சரிப்புடன் பாடபுத்தகம் வடிவமைப்பு, தமிழ் கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், இணையத்தில் தமிழ் ஆசிரியர்கள் மூலம் கற்றுத் தருதல், தமிழ் கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்தல், தமிழாசிரியர்களுக்கான பயிற்சிகள் அளித்தல், பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அனுப்பி வைத்தல் போன்ற பணிகள் இந்த கழகத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் இந்த பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Virtual Academy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->