பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஜூன் 2-ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


10ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஜூன் 2ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டிற்கான அரசு பொது தேர்வு கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பயிலும் 9.55 லட்சம் மாணவ மாணவிகள் பொது தேர்வை எழுதுகின்றனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு 3 ஆயிரத்து 936 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகின்றது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு மே மாதம் 30-ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 2ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenth standard exam paper correction


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->