ஆவடி அருகே சோகம் - இரட்டைச் சகோதரர்களை ஓட ஓட விரட்டி கொன்ற கும்பல்..!
brothers murder in chennai avadi
ஆவடி அருகே இரட்டையர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஆவடி அருகே குற்றவாளிகளான ஸ்டாலின், ரெட்டமலை சீனிவாசன் உள்ளிட்டோரை மூன்று பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று வெட்டிக்கொலை செய்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
brothers murder in chennai avadi