போலி அறிவியலை பரப்புவது பொருத்தமற்றது - ஐஐடி இயக்குனரின் கருத்துக்கு கார்த்திக் சிதம்பரம் கருத்து.! - Seithipunal
Seithipunal


சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோ பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கோ பூஜை நிகழ்வில் பேசிய ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். 

அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது."

"கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

காமக்கோடியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தும், கடும் கண்டனங்களை தெரிவித்தும் வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-  "ஐ.ஐ.டி. மெட்ராஸ் இயக்குநரே போலி அறிவியலை பரப்புவது பொருத்தமற்றது" என்றுத் தெரிவித்தார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass mp karthik sithambaram tweet about chennai iit director speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->