தமிழக அரசு வைத்த ஆப்பு.. இந்த டிகிரி முடித்தவர்கள் TNPSC தேர்வு எழுத முடியாது..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் 58 இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் பாரம்பரிய பட்டப்படிப்புகளுக்கு இணையாவை அல்ல என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாடு உயர் கல்வித் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி 58 படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பை பெறுவதற்கான டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளை எழுத முடியாது.

தமிழ்நாடு உயர்கல்வி துறையால் நியமிக்கப்பட்ட குழு இந்த முடிவை எடுத்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் B.com in company secretaryship பட்டப் படிப்பு வழக்கமான B.com பட்டப்படிப்பிற்கு இணையானது அல்ல. அதே போன்று சென்னை பல்கலைக்கழகத்தின் M.A in medical sociology படிப்பு M.A sociology பட்டப்படிப்புக்கு சமமானது அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அழகப்பா பல்கலைக்கழகத்தின் M.Com in Company Secretaryship மற்றும் B.Sc (Electronics) ஆகியவை M.Com மற்றும் B.Sc Physics ஆகிய படிப்புகளுக்கு நிகரானவை அல்ல எனவும், பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் M.Sc in Organic Chemistry, M.Sc. Applied Chemistry படிப்புகள் பொதுவான M.Sc. Chemistry படிப்புக்கு ஒப்பானவை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் MSWA படிப்பு வழக்கமான MSW படிப்புக்குச் சமமானது அல்ல எனவும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கும் M.Sc in Life Sciences படிப்பு MSc Zoology படிப்புக்கு சமமானது அல்ல எனவும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேற்கண்ட படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் இனி தமிழ்நாடு அரசு நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக முழுவதும் அரசு வேலைக்காக விண்ணப்பித்துள்ள 10,000க்கும் மேற்பட்டோர் பாதிப்படைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN govt has declared 58 degree courses ineligible for govt job


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->