மாணவிகளுக்கு மாதம் ரூ.1000... தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு.!!
tn govt order to college students for rs 1000
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டம் ஜூலை 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் தற்போது உயர்கல்வி தொடரும் மாணவிகளின் விவரங்களை அந்தந்த கல்வி நிர்வாகம் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. மாணவிகளின் கல்லூரி அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு மற்றும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்கள் ஆகியவற்றை சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் உயர் கல்வித்துறை சார்பில் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, உரிய சான்றிதழ்கள் கிடைக்கப் பெற்றவுடன், அவற்றை சரிபார்த்து சமூகநலத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளனர். அதன்பிறகு தகுதியுள்ள மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
English Summary
tn govt order to college students for rs 1000