ரூ.9000 உதவித்தொகையுடன் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி!
TN Govt transport dept job bus
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (எம்டிசி சென்னை, எஸ்இடிசி, விழுப்புரம் மண்டலங்கள்) ஒரு ஆண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கின்றது. இந்த பயிற்சி உதவித்தொகையுடன் வழங்கப்படுகிறது.
Graduate Apprentices (Engineering):
காலியிடங்கள் – 157
தகுதி – மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், எலக்ட்ரிக்கல், இசிஇ உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ/பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை – மாதம் ரூ.9,000
Graduate Apprentices (Non-Engineering):
காலியிடங்கள் – 151
தகுதி – பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ., பிசிஏ ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம்.
உதவித்தொகை – மாதம் ரூ.9,000
Diploma Apprentices (Technician Apprentice):
காலியிடங்கள் – 270
தகுதி – மேற்படி பொறியியல் பிரிவுகளில் டிப்ளமோ.
உதவித்தொகை – மாதம் ரூ.8,000
2021 முதல் 2024 வரை படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள். ஏற்கனவே பயிற்சி பெற்றோர், பணியிலுள்ளோர் விண்ணப்பிக்க வேண்டாம்.
விண்ணப்ப முறை:
முதல் தவணையாக www.nats.education.gov.in தளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் Top Down பட்டனில் "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்" தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: 22.4.2025
நேர்முகத் தேர்வு: 10.5.2025 முதல் 14.5.2025 வரை.
English Summary
TN Govt transport dept job bus