இந்தாண்டு காலேஜ் சேர முடியலையா? மீண்டும் ஓர் அறிய வாய்ப்பு வழங்கியது தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான நடப்பு கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்த நிலையில் பல்வேறு கல்லூரிகளில் சில பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையில் நிரப்பப்படாமல் காலியிடங்கள் உள்ளன. இதனால் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழிக அரசின் உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் "தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான இளநிலை படிப்புகளில் மாணாக்கர் சேர்க்கை முடிவுற்ற நிலையில் மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு நேரடி மாணாக்கர் சேர்க்கை (spot admission) சார்ந்த கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடைபெற உள்ளது.

மாணாக்கர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் "TNGASA2023-UG VACANCY - என்ற தொகுப்பில் காணலாம்" என உயர்கல்வி முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார். எனவே 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், துணை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் மேற்படிப்பை தொடரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt notification to conduct admissions in vacant seats in govt colleges


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->