டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை மாற்றம் குறித்து நாளை ஆலோசனை.!
TNPSC committee meeting to be held tomorrow
டிஎன்பிஎஸ்சி தேர்வு நடை முறைகளில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து நாளை ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
தமிழக அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து நிலைகளுக்கும் டிஎன்பிஎஸ்சி வழியாக தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறது. இது தேர்வாணையத்தின் பணி நியமன நடவடிக்கைகள் மற்றும் அரசின் கொள்கை முடிவுகளில் அடிப்படையில் அவ்வப்போது மாற்றப்படும். இதன்படி தேர்வு நடைமுறையில் அண்மையில்சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
மேலும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விவாதிக்க நாளை தேர்வாணையத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனையில், பிற மதங்களில் இருந்து மாறுவோருக்கு பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது என்பது குறித்தும், முதல் தலைமுறையாக இஸ்லாமியராக மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியுமா என்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஆறு தேர்வாணைய உறுப்பினர்கள், டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கிரன் குராலா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
English Summary
TNPSC committee meeting to be held tomorrow