#BigBreaking || ஊரடங்கு எதிரொலி : சற்றுமுன் ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வு.! - Seithipunal
Seithipunal


வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 9.1.2022 நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்புநிலை பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்புநிலை பணிகளுக்கான தேர்வு, வருகின்ற செவ்வாய்க்கிழமை 11 .1 .2022 அன்று நடைபெறும் என்று, (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே தேர்வு அறிவிக்கப்பட்ட ஹால் டிக்கெட்டை பயன்படுத்தி, இந்த பதினோராம் தேதி தேர்வை எழுதலாம் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில், நாளை சனிக்கிழமை கட்டடக்கலை மற்றும் திட்ட உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tnpsc exam sunday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->