குரூப் 4 தேர்வுகளுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு.. டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதி 4 பணியிடங்களுக்கான அறிவிப்பினை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 7381 பணியிடங்கள் என அறிவித்திருந்தது. தற்போது காலியாக இருக்கும் ஏறக்குறைய 3000-க்கும் மேற்பட்ட இடங்களையும் சேர்த்து மொத்தமாக 10,117 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. திருத்தப்பட்ட அறிவிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது.

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். அவற்றில் சிலர் உரிய சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்யாமலும், முழுமையாக பதிவேற்றம் செய்யாமலும், குறைபாடாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை டி.என்.பி.எஸ்.சி கண்டறிந்துள்ளது.

இந்த நிலையில் தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கை எண்:07/2022, நாள் 30/03/2022ன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான தொகுதி-4 அடங்கிய பதவிகளுக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில் சரிபார்ப்புக்கு பின்னர் சில விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்யாமலும் / முழுமையாக பதிவேற்றம் / குறைபாடாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக 05/06/2023 முதல் 07/06/2023 மாலை 5:45 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அவ்விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே அவ்விண்ணப்பதாரர்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இ சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு தவறும் பட்சத்தில் அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது" என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் சார்பாக செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC gives an opportunity to group 4 candidates to upload certificates again


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->