தமிழகத்தில் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. தேர்வர்களுக்கான வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு நாளை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 9,35,344 பேரும், பெண்கள் 12, 67,457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளன.

காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7,689 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 503 இடங்களில் தேர்வு நடைபெறுகின்றது. சென்னையிலிருந்து ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் நாளை நடைபெறும் குரூப் 4 தேர்வில், தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்றுவிட வேண்டும். 

9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும், 12.45 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் யாரும், தேர்வறையை விட்டு வெளியேறக்கூடாது.

தேர்வர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.

செல்போன்கள் மற்றும் இதர பொருட்களைத் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை

தேர்வர்கள் தங்களுடைய கையெழுத்தை OMR தாளில் இரண்டு இடங்களில் பதிவு செய்ய வேண்டும், இடதுகை பெருவிரல் ரேகையை OMR தாளில் தேர்வு முடிந்த பின் பதிவிட வேண்டும்.

OMR தாளில் கருப்பு பால் பாய்ண்ட் பேனாவைத் தவிர பென்சில் அல்லது வேறு பேனாவில் எழுதக் கூடாது.

OMR தாளில் தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணைக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும். 

OMR தாளில் ஒரு கட்டத்தைத் தவிர ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்களைத் விடைகளாகக் குறிக்கக்கூடாது . 

விடை தெரியாத கேள்விக்கு OMR தாளில் உள்ள E என்கிற கட்டத்தில் Shade செய்ய வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC Group 4 Exam tomorrow in Tamil Nadu Guideline Procedures Released for Candidates


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->