பரந்தூர் மக்களை சந்திக்கும் விஜய்:  காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


இடத்தை ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நடந்து வந்த நிலையில்,  பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினரை தனியார் திருமண மண்டபத்தில் இன்று விஜய் சந்திக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று (திங்கட்கிழமை) சந்திக்கிறார். இதனிடையே ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் திடல் பகுதியில் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் போலீசார் பரந்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டத்தை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர்.

மேலும் போராட்ட குழுவினரும் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளும் அம்பேத்கர் திடலில்தான் கூட்டத்தை நடத்துவோம் என மீண்டும் மீண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வலியுறுத்தினர். 

இந்நிலையில் இடத்தை ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நடந்து வந்த நிலையில், பரந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று பகல் 12 மணியில் இருந்து 1 மணி வரை பரந்தூர் போராட்ட குழுவினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

முன்னதாக விஜய் போராட்ட குழுவினரை சந்திக்க பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்திருந்தது. அதன்படி அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் மக்களை விஜய் சந்திக்க வேண்டும் என்றும் அதிக கூட்டம் கூடாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்களே வரவேண்டும் என்றும்  அனுமதிக்கப்பட்ட வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay to meet people of Parandur Do you know what restrictions imposed by the police?


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->