வெள்ளை டி-சர்ட் இயக்கம் - இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி.!
ragul gandhi invite white t shirt movement
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி பெரும்பாலும் வெள்ளை நிற டி-சர்ட் அணிவது வழக்கம். இதனால், அவர் 'வெள்ளை டி-சர்ட் இயக்கம்' தொடங்குவதாக சமீபத்தில் அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்திலும் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில், ராகுல்காந்தி தெரிவித்து இருப்பதாவது:-
"இன்று ஏழைகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரை மோடி அரசு கண்டுகொள்வது இல்லை. அதற்கு மாறாக அந்த அரசு சில பெருமுதலாளிகளை மேலும் வளப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது.
தங்கள் ரத்தம் மற்றும் வியர்வையால் நாட்டை வளப்படுத்தும் உழைக்கும் வர்க்கத்தினரின் நிலைமை மோசமாகி வருகிறது. அவர்கள் பல்வேறு வகையான அநீதி மற்றும் அராஜகங்களை தாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு நீதியும், உரிமைகளும் கிடைக்க வலிமையாக குரல் எழுப்புவது நம் அனைவரது பொறுப்பு. இந்த சிந்தனையுடன், 'வெள்ளை டி-சர்ட் இயக்கம்' தொடங்கி உள்ளோம். இந்த இயக்கத்தில் திரளாக சேருமாறு இளைஞர்களையும், உழைக்கும் வர்க்கத்தினரையும் கேட்டுக்கொள்கிறேன்.
பொருளாதார நீதியில் நம்பிக்கை இருந்தால், வெள்ளை டி-சர்ட் அணிந்து, இயக்கத்தில் பங்கு பெறுங்கள். இந்த இயக்கத்தில் இணையவும், விரிவான தகவல்களை பெறவும் இணையதளத்தை அணுகலாம் அல்லது '9999812024' என்ற எண்ணுக்கு 'மிஸ்டுகால்' கொடுக்கலாம்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
ragul gandhi invite white t shirt movement