#TNPSC_GROUP4 || 6,244 காலி பணியிடங்கள்.. ஜூன் 9ல் போட்டி தேர்வு.. TNPSC அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பில் கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், வனக்காப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் சுமார் 6244 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குரூப் 4 தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in ஆகிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்தின் மீதான திருத்தங்கள் மேற்கொள்ள பிப்ரவரி 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வானது வரும் ஜூன் 9ஆம் தேதி காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/english/1_2024-Eng.pdf இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tnpsc group4 job vacancy and exam date announced


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->