நில அளவையர் உள்ளிட்ட 1089 பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு.. டி.என்.பி. எஸ். சி வெளியீடு..!
TNPSC Offers a Exam
நில அளவையர் ,வரைவாளர் ,உதவி வரைவாளர் பதவிக்கான 1,089 பணியிடங்ககளை நிரப்ப டி.என்,பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது. இதனால், அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
நில அளவையர் ,வரைவாளர் ,உதவி வரைவாளர் பதவிக்கான 1,089 காலிபணியிடங்களுக்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு ஆகஸ்ட் 27 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
செப்டம்பர் 1 முதல் 3 ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எழுத்து தேர்வு வருகின்ற நவம்பர் 6 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது