உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை.. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.!!
today last date to apply for rs 1000 govt school girl students
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடந்த ஜூன் 30-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, உயர்கல்வியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை 10ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டது. இந்த வகையில் இந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாணவிகள் www.penkalvi.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவேற்ற வேண்டும். கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பாக தகவல்கள் கட்டணமில்லா 14417 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
English Summary
today last date to apply for rs 1000 govt school girl students