ஜன.1, 2025ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு.!! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி,

1) இந்தாண்டு மே 31ஆம் தேதிக்குள் கண்டறியப்பட்டதாரி ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்தல்.

2) ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடித்தல்

3) ஜூலை ஒன்றாம் தேதிக்குள் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிட மதிப்பீடு செய்தல்

4) ஜூலை 15ஆம் தேதிக்குள் காலி பணியிடங்களை நிரப்ப கூறும் கருத்துக்கள் இருக்கும் பட்சத்தில் அதனை அரசுக்கு அனுப்புதல்

5)செப்டம்பர் 30ம் தேதிக்குள் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் மீதான அரசாணை வெளியீடுதல்

6)அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் அரசாணையில் குறிப்பிடப்படும் நேரடி பணி நியமனம் செய்யப்படும் உத்தேச பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய குழு மற்றும் அதன் நிதித்துறை உறுப்பினர்களின் ஒப்புதல் உறுதி செய்த பின்னர் அறிவிப்பு வெளியிடுதல்.

7) 2025 ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடத்துதல். 

8) 2025 ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுதல்

9) 2025 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தெரிவு செய்யப்பட்டு தேர்வுகளில் இறுதி பட்டியல் வெளியிடுதல் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை அரசு செயலர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trb Exam for Graduate Teachers on Jan1 2025


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->