UPSC தேர்வு தேதி அறிவிப்பு.!
UPSC Preliminary exam date announced
அகில இந்திய குடிமை பணிகளுக்கான முதல் நிலை தேர்வு ஜூன் 5-ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
2022-ம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு (preliminary test) முதல்நிலை தேர்வுகள் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இம்மாதம் 22-ஆம் தேதிக்குள் www.upsc.gov.in மற்றும் https://upsconline.nic.in ஆகிய இணையதளங்களில் ஏதேனும் ஒன்றின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளும் இந்த தேர்வுக்கு விண்னப்பிக்கலாம்.
முதல்நிலை தேர்வு முடிந்து, முடிவுகள் வெளியிடப்பட பின் அதில் தேர்ச்சி பெற்றவர்கள், முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டு மட்டும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்பட 861 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
English Summary
UPSC Preliminary exam date announced