ஒரு வருடத்திற்கு சம்பளம் கிடையாது - சொமேட்டோ நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பால் அதிர்ச்சி.!
zpmetto compeny annaounce job vacancy
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான சொமேட்டோவில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வரும் தீபிந்தர் கோயல் சொமேட்டோ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தலைவர் என்ற பதவியை உருவாக்கி, அந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
மேலும் அதற்கான விதிமுறைகளையும் அறிவித்துள்ளார். அதாவது, இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு முதல் ஆண்டு சம்பளம் வழங்கப்பட மாட்டாது. அதேபோல், அந்த நபர் ரூ.20 லட்சத்தை முன்தொகையாக, பீடிங் இண்டியா அமைப்புக்கு கொடுக்க வேண்டும். அதன்பிறகு, 2வது ஆண்டில் இருந்து வருடத்திற்கு ரூ.50 லட்சத்திற்கு அதிகமான தொகை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படுபவர் சொல்லும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக் குறித்து தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளதாவது:-, 'இது வழக்கமான சலுகைகளுடன் இருக்கும் வேலை கிடையாது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஊதியம் பெறும் நோக்கில் இருக்கக் கூடாது.
கற்றல் வாய்ப்பிற்காக இந்தப் பணியைச் செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள், சொமேட்டோவின் உயர் திட்டங்களான பிளின்கிட், ஹைபர்ப்யூர் மற்றும் பீடிங் இண்டியா ஆகியவற்றில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
zpmetto compeny annaounce job vacancy