அறிவாலயமே பஞ்சமி நிலம் தான்! பீதியை கிளப்பிய திருமாவளவன்! பீதியில் திமுக எம்பி!  - Seithipunal
Seithipunal


தி மு க தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் அறிவாலயம் பஞ்சமி நிலம் தான் என திமுக கூட்டணி கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

விக்கிரவாண்டி நாங்குநேரி இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது ஏதேனும் ஒரு சர்ச்சை உண்டாக்கி கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வையும் அவர் பதிவு செய்ய, பதிவு செய்ய, அதற்கு பாமக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக 1985ஆம்

இந்த நிலையில் அசுரன் படத்தினை பார்த்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் பஞ்சமி இடத்தில்தான் இருக்கிறது என ஒரு ட்வீட் போட அது தீயாக பரவியது. 

1985 ஆண்டு முரசொலி அலுவலகம் தனியார் இடம் இருந்து வாங்கப்பட்டு இருப்பதாக ஒரு பத்திரத்தை திமுக சார்பில் வெளியிட்டு டாக்டர் ராமதாசுக்கு முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என நிரூபித்து விட்டால் நான் அரசியலை விட்டே விலக தயார். அவ்வாறு நிரூபிக்க முடியவில்லை எனில் நீங்கள் அரசியலை விட்டு விலக தயாரா என சவால் விட்டிருந்தார். 

இந்த பிரச்சினை அப்படியே இருக்க, மறுபுறம் ஒரு வீடியோவானது வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில் திமுகவின் கூட்டணியில் தற்போது இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போது அறிவாலயம் எல்ஐசி உள்ளிட்ட பல இடங்களில் இருக்கும் பஞ்சமி இடங்களை மீட்க வேண்டும் என அவர் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது பரவி வருவதால் திமுகவினர் பீதியில் உறைந்து போனார்கள்.  கூட்டணிக் கட்சித் தலைவர் இப்படி பேசுவாரா என அதிர்ந்து போக, பின்னர்தான் அந்த வீடியோ பழைய வீடியோ எனவும், திமுக கூட்டணியில் இல்லாதபோது திருமாவளவன் பேசியது என தெரியவந்துள்ளது. 

#BreakingNews பஞ்சமி நிலம்! ஆதி முதல் தோண்டி திமுகவை திணறவைக்கும் டாக்டர் ராமதாஸ்! விழிபிதுங்கும் ஸ்டாலின்!

அதேபோல சமூக வலைத்தளங்களில் திமுக எம்பியை எதிர்த்து திருமாவளவன் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்றும் ஒரு குரல் கொடுப்பார் என தகவல் பரவி வருகிறது. அதாவது திமுக எம்பியாக இருக்கும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து நடத்தும் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகமானது பஞ்சமி நிலங்களை அபகரித்து கட்டப்பட்டதாக ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஒருவேளை தற்போது திருமாவளவன் கூட்டணியில் இல்லை என்றால் இந்த பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என திமுக விற்கு எதிராக குரல் கொடுத்திருப்பார் என சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள். 

தேர்தல் பிரச்சாரத்திற்காக நாங்குநேரி சென்ற ஸ்டாலின் அங்கே உள்ள தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகளை கவர்வதற்காக அசுரன் என்ற படத்தினை பார்க்க போக, அதன் வழியாக பஞ்சமி நிலம் மீட்பு என்று ஒரு டுவிட்டை போட, திமுகவிற்கு அது பல வழிகளில் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.  ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு டுவிட்டால் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு பஞ்சமி நிலம் விஷயத்தில் ஏற்பட்டு வருகிறது. மேலும் திமுக தரப்பில் வெளியிடப்பட்ட பத்திரமும் பல சர்ச்சையான கேள்விகளையும், சந்தேகங்களையும் உண்டாக்கியுள்ளது. 

"தேவையில்லாமல் ஜெயலலிதா மீது பொய்யான புகார்களைக்கூறி வருகிறார் முதல்வர் கருணாநிதி. பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள முரசொலி அலுவலகம், அரசுநிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயம் ஆகியவை குறித்து கருணாநிதி வாய் திறக்காமல் மெளனமாக இருப்பது ஏன் என்பதை அவர் விளக்க வேண்டும் என்றார் திருமாவளவன்" இவ்வாறு 2006 ஆம் ஆண்டு திருமாவளவன் பேசியது குறிப்பிடத்தக்கது. 

Video : Social Media Source 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arivalayam is panjami land said thirumavalavan in old video


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->