லியோனி, சுப.வீ, ஜாகிர் உசைன்., இதான் திராவிட மாடலா? - ஹெச் ராஜா காட்டமான விமர்சனம்.!
h raja twit about Dravidian model
சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் பாஜகவின் ஹெச் ராஜா. இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
மேலும், அரசியல் போராட்டம், செய்தியாளர் சந்திப்பு உள்ளிட்டவைகளில் இவரின் பேச்சுக்கள் சர்ச்சையாவது வழக்கம். உயர் நீதிமன்றம் குறித்து இவர் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் திராவிட ஆட்சி குறித்து ஹெச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காட்டமான விமர்சனம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில்,
"எது திராவிட மாடல். ஆபாசமாக பெண்களை பேசும் லியோனி பாடநூல் நிறுவன தலைவர். திருமணம் கடந்த உறவு ஸ்பெஷலிஸ்ட் சுப.வி பாடநூல் நிறுவன ஆலோசகர். கதவை தாளிட்டு பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட ஜாகிர் உசைன் முதல்வருடன் துபாயில். இந்த கீழ்த்தரமான மாடல் தமிழகத்திற்கு தேவையில்லை"
இவ்வாறு ஹெச் ராஜா அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவிற்கு திமுகவினர் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
h raja twit about Dravidian model