பிக் பாஸ் சீசன் 4 எப்போது? தொகுப்பாளர் அதிரடி மாற்றம்? முதல் முறையாக வெளியான தகவல்!!
Telugu bigg boss 4 show
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ். அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
மேலும் ஹிந்தி, மலையாளம், மராத்தி என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி தமிழ், தெலுங்குவில் மற்றும் மூன்று சீசன்களை மட்டுமே பார்த்திருக்கிறது.
இந்த நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும்? என்பது பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. ஜூன் மாதத்தில் நிகழ்ச்சி தொடங்க உள்ளது எனவும், இம்முறை இந்த நிகழ்ச்சியை சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தொகுத்து வழங்கலாம் என்றும் தகவல்கள் வந்துள்ளது.
தமிழிலும் வெகு விரைவில் தொடங்க உள்ளது, தமிழில் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்பார்க்கப்படுகிறது.