முடி கொட்டுதேனு கவலையா? இந்த லட்டு மட்டும் சாப்பிடுங்க..? நீங்களே ஆச்சரியப்படுவீங்க..!
Are you worried about hair loss
நவீன வாழ்க்கை முறையில் பெரும்பாலும் ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் பொதுவாக சந்திக்கின்ற பிரச்சினை இந்த முடி கொட்டுதல் பிரச்சினைதான். என்ன பண்ணினாலும் முடி வளர மாட்டேன்குது என்று அழுது மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதனாலும் அதிக முடி கொட்டுதல் பிரச்சினையை அவர்கள் சந்திக்கின்றனர்.
அத்துடன் எந்த விளம்பரங்களில் என்ன சொன்னாலும், அதை வாங்கி முயற்சி செய்து பலன் இல்லையேன்னு புலம்பி தீர்ப்பாங்க. இப்படி முடி ஆரோக்கியமாக இருக்கனும், அடர்த்தியாக வளரனும், முடி உதிர்தல் பிரச்சனை இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் தங்களுடைய முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முக்கியம்.
![](https://img.seithipunal.com/media/laddu 2-6ktfd.jpg)
இப்படி முடி உதிர்தல் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று கவலை படுபவர்களுக்கு ஒரு குட் நியூஸ். ஒரு லட்டு சாப்பிடுங்க போதும். அப்படி என்ன லட்டு சாப்பிட்டால் முடி உதிராது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அப்படி முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு லட்டுவை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி பார்ப்போம். எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து இந்த லட்டுவை செய்யலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்;
கருவேப்பிலை (இரண்டு கைப்பிடி)
பச்சைப்பயறு (1/2 கிலோ )
பொட்டுக்கடலை (300gm)
வெல்லம் (1/2 கிலோ)
![](https://img.seithipunal.com/media/Untitled design (21)-fh89r.jpg)
செய்முறை:
இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலையை எடுத்து சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். சிறிதளவு நெய் ஊற்றி அதில் கருவேப்பிலையை போட்டு நன்றாக வறுத்தெடுக்க வேண்டும். அதாவது அந்த கருவேப்பிலையை கையில் அமுக்கினால் அது நொறுங்க வேண்டும். அந்த பதம் வந்த பிறகு அதை எடுத்து ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள்.
பிறகு அதே பாத்திரத்தில் பச்சை பயிரை சேர்த்து அது நன்றாக சிவக்கும் வரை குறைந்த தீயில் வைத்து வறுத்துக் கொள்ள வேண்டும். ஆரிய உடன் கருவேப்பில்லை மற்றும் பச்சை பயறு ஆகிய இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த இந்த பொடியை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து, பொட்டுக்கடலையும் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் எடுத்து, அதையும் இதனுடன் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, அரை கிலோ வெல்லத்தை இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு 500ml தண்ணீர் ஊற்றி 05 ஏலக்காயை அதில் இடித்து போடலாம் அல்லது ஏலக்காய் பொடி தேவையான அளவு போட்டு வெல்லம் நன்றாக கரைந்து திக்காகும் போது அடுப்பை அணைத்து விடவும்.
பின்னர் இந்த பாகை வடிகட்டி, சிறிது சிறிதாக நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவில் சேர்த்து ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து விடவும்.
![](https://img.seithipunal.com/media/laddu-hjv67.jpg)
நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் இதனுடன் நாம் நெய் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி நன்றாக கலந்து இதை ஒரு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிணைந்து கொள்ள வேண்டும். பிறகு கைகளில் ஈரம் இல்லாமல் சிறிது நெய்யை தடவிக்கொண்டு இதை உருண்டையாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் இதில் நமக்குத் தேவையான பருப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த லட்டுவை தினமும் காலையில் ஒன்று என்ற வீதம் சாப்பிட்டு வருபவர்களுக்கு முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
English Summary
Are you worried about hair loss