ஸ்வீட் சாப்பிட்டாலும் டயபடிக் வரக் கூடாதா? அப்போ இதை பண்ணுங்க! - Seithipunal
Seithipunal


சர்க்கரை நோய் என்பது நாம் இனிப்புகளை சாப்பிடுவதனால் மட்டும் வருவதல்ல. அது நம் உடலில் இருக்கும் இன்சுலின் அளவு மாறுபடுவதை பொறுத்து  ஏற்படுகின்ற உடலின் தன்மையாகும். 

நாம் இனிப்புகளை சாப்பிட்டு கொண்டே சர்க்கரை நோயிலிருந்து எவ்வாறு நம்மை காத்துக் கொள்வது என்று பார்க்கலாம்.

நம்மை நாம் சுறுசுறுப்பாகவும், ஆக்டிவாகவும் வைத்திருப்பதன் மூலம் இனிப்பு வகைகளை சாப்பிட்டாலும் நம்மை நீரிழிவு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இயலும். உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், கவலைக் கொள்ளாமல் மன அழுத்தமில்லாமல் இருப்பது போன்றவைகள் கூட உதவி புரிகிறது.

பெரும்பாலும் நாம் சாப்பிடும் இனிப்புகள் இயற்கையான இனிப்புச்சுவையைக் கொண்டவையாக இருக்குமாறு கண்காணித்துக் கொள்ள வேண்டும். பழங்கள், தேன், கருப்பட்டி போன்ற இனிப்புகளை பயன்படுத்தலாம்.

காலை உணவு வேளைகளில்  நமக்கு விருப்பமான இனிப்புகளை எடுத்துக் கொள்வதன் மூலம்  சர்க்கரை, நம் உடலில் தங்காமல் அதனாற்றல் உடலினால் ஜீரணிக்கப்படுகிறது.

இன்சுலின் உற்பத்தியை தூண்டும் உணவுப் பொருட்களான வெந்தயம், பூண்டு அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள், நம் கணையத்தின் செயல்பாட்டை அதிகரிக்கின்றன. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது.

வெள்ளை சர்க்கரையை தவிர்த்து நாட்டுச் சர்க்கரை, அச்சு வெல்லம் போன்ற உடலுக்கு நன்மை கிடைக்கக்கூடிய இனிப்பு வகைகளை பயன்படுத்தலாம் .

எந்த உணவுமே அளவோடு இருந்தால்தான் நல்லது, எனவே  இனிப்பு வகைகளையும்  அளவோடு உண்டு நலமோடு வாழ்வோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Being eating sweets still can be a non diabetic tips


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->