கிராம்பில் உள்ள மருத்துவ குணங்கள்.! இத்தனை பிரச்சனைக்கும் இது தீர்வா.?!
benefit of kirambu
கிராம்பு அளவில் சிறியதாக இருந்தாலும் அதனுடைய வீரியம் அதிகம். மனித உடலுக்கு பல்வேறு பயன்களை அளிக்கிறது .சீன மருத்துவத்தில் கிராம்பின் பங்கு அதிகம் .சிறுநீரகம் ,மண்ணீரல் ,வயிறு சம்பத்தப்பட்ட நோய்களுக்கு கிராம்பையே அதிகம் பயன்படுத்துகின்றனர் .கிராம்பின் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணங்களோடு உள்ளன .இதை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு தீர்வாக அமைகிறது.இதன் மருத்துவ குணங்களை பின்வருமாறு பார்க்கலாம் .
பசியை தூண்ட : சிலருக்கு சிறிதளவு உணவு உட்கொண்டாலும் செரிமானம் ஆகாது .மேலும் இவர்களுக்கு பசியும் இருக்காது.இவர்கள் தினமும் சிறிதளவு கிராம்பு சேர்த்துக்கொண்டால் செரிமானமும் அதிகரிக்கும் பசியையும் தூண்டும்
வறட்டு இருமல் :- கிராம்பு பொடியுடன் பனங்கர்கண்டு சேர்த்து காய்ச்சிய பாலில் கலந்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் நீங்கிவிடும்
தலைபாரம் நீங்க :- கிராம்பை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மேலும் பற்று போட்டு வந்தால் தலையில் கட்டிய நீர் இறங்கி தலை பாரம் குறையும்
பித்தம் குறைய : வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை வைத்துதான் உடலின் செயல்பாடுகள் அமைந்துள்ளன .இவற்றில் ஒன்றின் நிலை மாறினாலும் உடலில் பாதிப்பு ஏற்படும் .இவற்றில் அதிகம் நிலை மாறுவது பித்த நீரில் தான் .பித்தம் அதிகம் அனால் உடலில் பல நோய்கள் உண்டாகும் .தினமும் ஒரு கிராம்பு உண்டு வர பித்தம் குறையும் .
பல் வலி நீங்க : கிராம்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை பஞ்சில் நனைத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குறையும்.சொத்தை பல் பிரச்சினைக்கும் கிராம்பே தீர்வாக அமைகிறது.
வாந்தி நிற்க : பேரூந்தில் பயணம் செய்யும் போது கிராம்பை வாயில் போட்டு மென்று சாறை உள்ளே இறக்கினால் வாந்தி எடுப்பதை தவிர்க்கலாம்
வாய் புண் குணமாக : வயிற்றில் புண் இருந்தால் வாயிலும் புண் உண்டாகும் .கிராம்பை அரைத்து தேனுடன் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்
தொண்டை புண் ஆற : கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைத்து சாறு இறக்கினால் தொண்டை புண் குணமாகும்
தோல் படை நீங்க : கிராம்பை நீர் விட்டு அரைத்து படைகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் தோலில் உண்டான படை மறைந்து போகும்
உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.