நாம் நறுமணசுவைக்காக பயன்படுத்தும் ‘ பிரிஞ்சி இலை’ சிறுநீரகக் கற்களைத் தடுக்குமா?
benefits of bay leaf
நாம் பிரியாணி மற்றும் அசைவ உணவுகளில் பயன்படுத்தும் பிரிஞ்சி இலைகள் சுவை மற்றும் நறுமணத்தோடு நம் உடலுக்கும் ஏராளமான நன்மைகளை தருகின்றது. இந்த இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தியாமின், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் பி6, ஃபோலேட் ஆகியவை உள்ளன. கால்சியம், இரும்பு, மக்னீசியம் பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீஸ் மற்றும் செலினியம் போன்ற தாதுக்களும் நிறைந்து இருக்கின்றன.
இந்த இலைகள் நமது செரிமானத்திற்கு நன்மை பயக்கக்கூடிய ஒன்றாகும் . இவை வயிற்று வலி, இரைப்பை குடல் தொற்றுகள், வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும் செரிமானத்தை எளிதாக்குகின்றன. இவை நம் வயிற்றில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மைகள் வெளியேறுவதற்கும் எரிச்சலூட்டும் குடல் நோய்க்கான அறிகுறிகளை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.
பிரிஞ்சி இலைகள் ஒரு டையூரிடிக் ஆக செயல்பட்டு சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இவை சிறுநீர் கழிப்பதை தூண்டுகின்றன இதன் காரணமாக பியூரிட்டிக் போன்ற தேவையில்லாத புரத அமிலங்கள் ரத்தத்தில் படிவது தவிர்க்கப்படுகிறது. இந்த இலைகள் உடலில் உள்ள யூரேஸின் அளவைக் குறைப்பதன் மூலம் சிறுநீரகக் கற்களைத் தடுக்க உதவும் என்று ஒரு ஆய்வு பரிந்துரைக்கிறது. இவற்றில் டையூரிடிக் தன்மையின் காரணமாக உடலில் அதிகமாக சோடியம் படிவதை தவிர்க்கின்றன .
இந்த இலைகளில் இருக்கக்கூடிய இரண்டு முக்கிய சேர்மங்களான ரூடின் மற்றும் காஃபிக் காரணமாக இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.ருடின் இதயச்சுவர்களை பலப்படுத்துகிறது . அதே நேரத்தில் மற்றொரு சேர்மமான காஃபிக் அமிலம் எல்.டி.எல் கெட்ட கொழுப்புகளை இதய அமைப்பிலிருந்து அகற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த இலைகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலமும் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலமும் நம் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இவற்றில் காணப்படும் பைட்டோகெமிக்கல்கள் மேம்பட்ட இன்சுலின் செயல்பாட்டின் காரணமாக நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளை எதிர்த்து போராடக் கூடியது.
பிரிஞ்சி இலைகள் சுவாசம் அமைப்புகளுக்கு நன்மை பயக்கக் கூடிய ஒன்றாகும். இவற்றில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயை மார்பில் தடவி வர பல்வேறு சுவாச நோய் தொற்றுகள் மற்றும் கோளாறுகளில் இருந்து விடுபட உதவும். இவை அரோமா தெரபி முறைகளில் வேலை செய்கிறது. இவை சளியை தவிர்ப்பதற்கும் நம் சுவாசப் பாதையில் இருக்கக்கூடிய நுண்ணுயிரிகளை அழிக்கவும் பயன்படுகின்றன.