தலை முதல் பாதம் வரை நன்மையை அள்ளித்தரும் கொய்யா.! - Seithipunal
Seithipunal


"ஏழைகளின் ஆப்பிள்" என்று அழைக்கப்படும் கொய்யா பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். 

* கொய்யா பழங்களில் உள்ள நார்ச்சத்து நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. குடலை சுத்தப்படுத்துவதுடன் குடலில் நச்சுக்கள் சேருவது தவிர்த்து குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. 

* 100 கிராம் கொய்யா பழத்தில் மூன்று மடங்கு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* நோய் கிருமி தொற்று, சில வகையான புற்றுநோய் தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கிறது. ரத்த குழாய்கள், எலும்பு, தோல், உடல் உள் உறுப்புகள் உள்ளிட்ட உறுப்புகளின் அடிப்படை கட்டமைப்பு புரதமான கொலாஜன் சேர்க்கைக்கு அவசியமாக இந்த கொய்யா உள்ளது. 

* வைட்டமின் சி யை தவிர வைட்டமின் ஏவும் இதில் நிறைந்து இருப்பதால் கண், தோல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது.

* கொய்யாபழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் செல்களின் நீர்ச்சத்து பராமரிப்புக்கும், இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் இருக்கவும் பயன்படுகிறது. 

* கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த கொய்யாப்பழம் மிகவும் பாதுகாப்பான ஒரு உணவு. 

* சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக செயலிழப்பு, இதய பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை படி இந்தக் கொய்யாப்பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of guava fruit


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->