ஏழைகளின் தேவாமிர்தம் கடலை மிட்டாயில் உள்ள நன்மைகள்..!
Benefits of Kadalai Mittai Health Tips
நம்மில் பெரும்பாலானோருக்கு எப்போதும் வாயில் கரக்.. மொறுக்கென நொறுக்கு தீனிகளை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் அதிகளவு இருக்கும். இன்று கடைகளில் விற்பனையாகும் பல உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு மத்தியில் ஓரமாக இருக்கும் கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்றவற்றை இன்றளவு நாம் மறந்து வருகிறோம். இது போல நாம் மறந்த பல விஷயங்கள் இருக்கிறது.
நொறுக்கு தீனிகள் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் இருந்தால், கடலை மிட்டாய் வாங்கி சாப்பிடலாம். கடலை மிட்டாயை சாப்பிடுவதற்கு அரைமணிநேரம் முன்னரும், அரைமணிநேரம் பின்னரும் சாப்பிட்டால் உமிழ்நீர் சுரக்கும். உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை தருகிறது.
கடலையில் உள்ள பித்தம், வெல்லத்துடன் சேர்க்கப்படும் போது சமநிலையை அடைகிறது. கடலையும், வெள்ளமும் சேரும் போது புரதம், இரும்பு சத்து, செலினியம் போன்ற பல சத்துக்கள் மற்றும் தாது பொருட்களை நமது உடல் பெறுகிறது. நிலக்கடையில் உள்ள கார்போஹைட்ரேட், நார்சத்து, நல்ல கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புசத்து, கால்சியம், துத்தநாகம், மக்னீசு சத்து, பாஸ்பிரஸ் சத்து, பொட்டாசிய சத்து நமது உடலுக்கு தேவையான ஒன்றாகும்.
இதனைப்போன்று வெள்ளத்திலும் இரும்பு சத்து, கால்சியம் போன்றவை உள்ளது. நிலக்கடலையில் உள்ள வைட்டமின் பி, உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. தசைகளின் வலிமையை அதிகரிக்கும். உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுக்குள் வைக்கும். வைட்டமின் பி 3 மூளையின் செயல்பாட்டை சரி செய்யும். நினைவாற்றலை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு கடலை மிட்டாய்களை அதிகளவு கொடுக்கலாம்.
நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் குறையும். நிலக்கடலையில் உள்ள நல்ல கொழுப்புகள் மற்றும் போலிக் அமிலம் இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இறைச்சி உணவுகளுக்கு இணையான சத்துக்கள் நிலக்கடலையில் உள்ளது. மூளையை உற்சாகப்படுத்தும் அமினோ அமிலம், மூளை நரம்பை தூண்டும் செர்டோன், மன அழுத்தத்தை குறைகிறது.
கர்ப்பிணி பெண்கள் நிலக்கடலை அல்லது கடலை மிட்டாயை சாப்பிட்டு வந்தால் கருப்பை சீராக செயல்படும். கருப்பை நீர்கட்டிகள் குறையும். கருவின் மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு வளர்ச்சியை சிறப்பித்து கொடுக்கும். இளமையை பராமரிக்க உதவுகிறது. பெண்கள் நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால், எலும்புகள் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் இருக்கும். ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் மலட்டுத்தன்மை பிரச்னையை சரி செய்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையை குறைகிறது. இரத்த ஓட்டத்தினை சீர்படுத்துகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Benefits of Kadalai Mittai Health Tips