அதிமுக தலைமையில் கூட்டணி + கூட்டணி ஆட்சி - அமித்ஷா அறிவிப்பு!
ADMK BJP Alliance confirm 2026 Election
அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் மத்திய உள்துறை அமித் ஷா நேற்று (ஏப். 10) இரவு சென்னை வந்துள்ளார்.
கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேசுவதற்காக அமித் ஷா கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்கியுள்ள அவர் இன்று காலை ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்துப் பேசிய நிலையில், பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனை சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அமித் ஷாவின் சந்திப்பு தற்போது நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகும் என்று கூறப்பட்ட நிலையில், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, பாஜக அமித் ஷா கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அமித் ஷா தெரிவிக்கையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இணைந்து தான் ஆட்சி அமைப்போம்" என்று தெரிவித்தார்.
English Summary
ADMK BJP Alliance confirm 2026 Election