ஒற்றைத் தலைவலியா? - கற்பூரம் மட்டும் போதும்.! - Seithipunal
Seithipunal


பூஜை பொருட்களில் ஒன்றான கற்பூரம் கடவுள் வழிபாட்டில் தான் பயன்படுத்தப்படும். ஆனால், இந்தக் கற்பூரம் உடல்நல பிரச்சனைகளையும் தீர்க்கும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது. அது என்னவென்று இந்த பதிவில் காண்போம்.

* தினமும் கற்பூர வாசனையை சுவாசித்தால் மன அழுத்தம் குறையும்; பதட்டம் நீங்கும். அதற்கு காரணம் இந்தக் கற்பூரத்தில் இருந்து வரும் வாசனை உங்கள் மனதை அமைதியாக்குகிறது. இதனால் உங்களை அறியாமலேயே உங்கள் முகத்தில் ஒரு புன்னகை வரும்.

* இந்தக் கற்பூர வாசனையை சுவாசித்தால் சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் குறையும். தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் கற்பூர வாசனையை சுவாசித்தால் போதும் உடனே நிவாரணம் கிடைக்கும். அதேபோல, கற்பூரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், அவை கிருமிகளை விலக்கி வைக்கும்.

* கற்பூரத்தை பொடியாக்கி, அதை எண்ணெயில் கலந்து உடலில் தடவினால் வலி மற்றும் அரிப்பு குறையும். அதுமட்டுமல்லாமல், தசைகள் மற்றும் மூட்டுகளில் உள்ள வலியையும் குறைக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of karpooram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->