கருப்பு கொண்டைக்கடலையில் கொட்டி கிடக்கும் சத்துக்கள் என்னென்ன தெரியுமா.?
Benefits of karuppu kondakadalai
இந்திய உணவுகளில் முக்கிய உணவுப் பொருளாக இருப்பது கருப்பு கொண்டைக்கடலை. இந்த கருப்பு கொண்டைக்கடலையை ஊறவைத்து பல்வேறு விதமான உணவுகள் சமைத்து சாப்பிட முடியும். அதன்படி பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும் கருப்பு கொண்டைக்கடலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.
கருப்பு கொண்டைக்கடலையில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால், இதனை சாப்பிடுபவர்களுக்கு எந்த நோயும் எளிதாக தாக்காது.
வெள்ளை கொண்டைக்கடலையை விட கருப்பு கொண்டைக்கடலையில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதேபோல் சர்க்கரையின் அளவு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பு கொண்டைக்கடலையில் அதிக அளவு புரோட்டின் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைக்கவும், தலைமுடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

கருப்பு கொண்டைக்கடலை சாப்பிடுவதால் இரும்பு சத்து குறைபாட்டை போக்க முடியும். இதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
கருப்பு கொண்டைக்கடலை கர்ப்பிணி பெண்களுக்கு அவசியமான உணவுப் பொருளாக உள்ளது. இதில் உள்ள வேதிப்பொருள் குழந்தை வளர்ச்சிக்கு உதவும் என கூறப்படுகிறது.
கருப்பு கொண்டைக்கடலையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பைட்டோ நீயூட்ரியன்கள் நிறைந்துள்ளன. இது ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள மினரல்கள் ரத்தம் கட்டுதலை தடுக்க உதவுகிறது.
English Summary
Benefits of karuppu kondakadalai