அண்ணாமலையின் செருப்பு சபதம் முடிவு..? செருப்பு வாங்கிக்கொடுத்த நயினார் நாகேந்திரன்..!
Nayinar Nagendran bought sandals for Annamalai
தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில், மாநில தலைவருக்கான சான்றிதழையும் அவர் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில், தமிழக பா.ஜ.க. தலைவராக இதுவரை செயல்பட்டு வந்த அண்னாமலை அந்த பொறுப்பில் இருந்து விடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன் என்று சபதம் எடுத்தார். அதனை தொடர்ந்து செறுப்பு அணியாமல் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார்.
இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன், அண்ணாமலைக்கு நிகழ்ச்சி மேடையில் செருப்பு வழங்கினார். அத்துடன், அதனை அணிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த செருப்பை அண்ணாமலை அணிந்துகொண்டார்.
தி.மு.க.வை ஆட்சியிலிருந்து அகற்றும்வரை செருப்பு அணியமாட்டேன் என்று கூறிய அண்ணாமலை தற்போது செருப்பை அணிந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Nayinar Nagendran bought sandals for Annamalai